ADDED : ஜூன் 12, 2026 08:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சண்முகாபுரம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி தமிழரசி, 58; நீரிழிவு நோயினால் பாதித்து, அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அருகில் உள்ளவர்கள் அவரது மகள் கலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் அங்கு சென்று கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது தமிழரசி வீட்டின் அறையில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
