/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் ஐந்தாம் ஆண்டு பவுர்ணமி ஆன்மிக நடைப்பயணம்
/
வில்லியனுாரில் ஐந்தாம் ஆண்டு பவுர்ணமி ஆன்மிக நடைப்பயணம்
வில்லியனுாரில் ஐந்தாம் ஆண்டு பவுர்ணமி ஆன்மிக நடைப்பயணம்
வில்லியனுாரில் ஐந்தாம் ஆண்டு பவுர்ணமி ஆன்மிக நடைப்பயணம்
ADDED : பிப் 02, 2026 03:29 AM

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு 5ம் ஆண்டு துவக்கஆன்மிக நடைபயணம் நேற்று மாலை நடந்தது.
வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மீக பூமியாக திகழ்கிறது.
திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி ஆன்மிக நடைப்பயணம் செல்லுகின்றனர்.
நேற்றுமாலை 6:00 மணிக்கு துவங்கிய 5ம் ஆண்டு துவக்க ஆன்மிக நடைபயணம், கோவில் வளாகத்தில் துவங்கி நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைகின்றனர்.

