/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக்கில் காலி இடம் இறுதி கட்ட கலந்தாய்வு
/
சென்டாக்கில் காலி இடம் இறுதி கட்ட கலந்தாய்வு
ADDED : மார் 17, 2025 02:42 AM
புதுச்சேரி: நீட் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் மாணவ சேர்க்கையில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு சிறப்பு இறுதிகட்ட கலந்தாய்வு இன்று 17 ம் தேதி நடக்கிறது.
இதற்கான வரைவு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் இன்று காலை 10:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். பின்னர் இறுதி பட்டியல் மற்றும் சேர்க்கை ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களது சேர்க்கை ஆணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அசல் சான்றிதழ்களுடன் கல்லுாரியில் சேர வேண்டும். இத்தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.