தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு இன்று துவக்கம்

பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு இன்று துவக்கம்

பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு இன்று துவக்கம்


ADDED : ஆக 07, 2025 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; புதுச்சேரியில் பிளஸ் 1 சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி செய்திக்குறிப்பு :

இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இவர்களுக்கும், சமீபத் தில் 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இதுவரை எந்த பள்ளியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, கலந்தாய்வு நடத்தி பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை ஆணை வழங்கப்படவுள்ளது.

சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன், 10ம் வகுப்பு மதிப்பெண் நகல், மாற்று சான்றிதழோடு குருசுக்குப்பம் ஸ்ரீ என்.கே.சி., அரசு மேல்நிலை பள்ளியில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

இங்கு, இன்று, நாளை மற் றும் 11ம் தேதிகளில் 499 மதிப்பெண் முதல் 300 வரை காலை 9:30 மணிக்கும், 299 மதிப்பெண் முதல் 175 வரை காலை 11:30 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 499 மதிப்பெண் முதல் 175 வரை புதுச்சேரி குடியிருப்பு சான்றிதழ் இல்லாதோ ருக்கு வரும் 11ம் தேதி மதியம் 2:30 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us