/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வூதிய திட்ட விபரம் வழங்க நிதித்துறை சுற்றறிக்கை
/
ஓய்வூதிய திட்ட விபரம் வழங்க நிதித்துறை சுற்றறிக்கை
ஓய்வூதிய திட்ட விபரம் வழங்க நிதித்துறை சுற்றறிக்கை
ஓய்வூதிய திட்ட விபரம் வழங்க நிதித்துறை சுற்றறிக்கை
ADDED : ஜூலை 26, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஓய்வூதிய திட்ட விவரங்களை 30 நாட்களில், நிதித்துறைக்கு வழங்க வேண்டும் என, சார்பு செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை அமல்படுத்த முன்மொழிவு ஆராயப்பட்டு வருகிறது. அதற்காக, நிதி துறைகள், மாநில தன்னாட்சி, பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஓய்வூதிய திட்ட விவரங்களை 30 நாட்களில் நிதித்துறைக்கு வழங்க வேண்டும்.
அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.