/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.31 கோடி நிதி உதவி வழங்கல்
/
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.31 கோடி நிதி உதவி வழங்கல்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.31 கோடி நிதி உதவி வழங்கல்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.31 கோடி நிதி உதவி வழங்கல்
ADDED : ஜூன் 18, 2025 04:52 AM

பாகூர்: அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் விவசாய இடுபொருள் மற்றும் சமுதாய முதலீட்டு நிதி வழங்கும் விழா நடந்தது.
விழாவில், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் பேசினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் அளவிலான மகளிர் கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்படி, பாகூர் கிழக்கு, பாகூர் மேற்கு, குருவிநத்தம், சோரியாங்குப்பம், பரிக்கல்பட்டு, மதிகிருஷ்ணாபுரம், மூ. புதுக்குப்பம் மற்றும் மனப்பட்டு ஆகிய பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், 11 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு, காய்கறி விதை தொகுப்பு, சமுதாய மேம்பாட்டு நிதியாக 87 லட்சத்து 50 ஆயிரம், நலிவுற்றோர் குறைப்பு நிதியாக 3 லட்சத்து 10 ஆயிரம், சமுதாய முதலீட்டு நிதியாக 21 லட்சத்து 60 ஆயிரம், மற்றும் வங்கி இணைப்பு கடன் உதவியாக 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
விழாவில், கிராம திட்ட பணியாளர்கள், பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு பணியாளர்கள், நிர்வாகிகள் மகளிர் கூட்டமைப்பு பிரதிநிதிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விரிவாக்க அதிகாரி சாலை ராஜன் நன்றி கூறினார்.