/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கல்
/
ஆற்றில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கல்
ஆற்றில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கல்
ஆற்றில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி வழங்கல்
ADDED : அக் 02, 2024 04:15 AM

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா சென்ற போது பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, முதல்வர் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
நெட்டப்பாக்கம் தொகுதி, மணமேடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், 21. இவர் கடந்த, மே மாதம் சுற்றுலா சென்றபோது, மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும், எதிர்பாராத விபத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சத்தை, ஆகாஷின் தந்தை தசரதனிடம் வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.