ADDED : மார் 18, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கூரை வீடு எரிந்ததில், ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.
அரியாங்குப்பம் அடுத்த பி.சி.பி., நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 49; பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தனது தாயை பார்க்க குடும்பத்துடன் சென்றார். அப்போது, அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில், வீட்டில் இருந்த, டி.வி., பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.