/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீயணைப்பு நிலைய அதிகாரி, திட்ட ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
/
தீயணைப்பு நிலைய அதிகாரி, திட்ட ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
தீயணைப்பு நிலைய அதிகாரி, திட்ட ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
தீயணைப்பு நிலைய அதிகாரி, திட்ட ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
ADDED : டிச 31, 2024 05:54 AM
புதுச்சேரி: தீயணைப்பு நிலைய அதிகாரி, திட்ட ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் ஆய்வாளர், தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 29ம் தேதி நடந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த 3,819 பேரில் 1,595 பேர் எழுதினர்.
இதேபோல், தீயணையப்பு நிலைய அதிகாரி தேர்வினை உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 533 பேரில், 425 பேர் எதிர் கொண்டு எழுதினர். அதை தொடர்ந்து விடை குறிப்புகள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து நேற்று திட்ட ஆய்வாளர், தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வில், பொது பிரிவில் கோகுல்ராஜ் 62 மதிப்பெண்ணுடன் முதலிடம், ரேவதி 60 மதிப்பெண்ணுடன் இரண்டாம் பிடித்தனர். எம்.பி.சி., பிரிவில் கவிபிரியா- 58.75 மதிப்பெண் முதலிடம், ஓ.பி.சி., பிரிவில் மணிகண்டன் 55.75, எஸ்.சி., பிரிவில் பிரசன்னராஜ் - 53 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர்.
தீயணைப்பு துறையின் நிலைய அதிகாரி பணியிட எழுத்து தேர்வு ஆண்கள் பிரிவில் ஆனந்தவேல்- 71 மதிப்பெண், பெண்கள் பிரிவில் ஜெயஸ்ரீ-71.25 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர். எம்.பி.சி., பிரிவில் சந்திரசேகர்-42.75, இ.டபுள்யூ.எஸ்., பிரிவில் வீரபாபு கோனா-48, எம்.பி.சி., பெண்கள் பிரிவில் உமா மகேஸ்வரி-65.25 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தனர்.
இத்தகவலை நிர்வாக சீர்திருத்த துறையின் தேர்வு கட்டுபாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.