/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையில் ஊற்றிய குருடாயில் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்
/
சாலையில் ஊற்றிய குருடாயில் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்
சாலையில் ஊற்றிய குருடாயில் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்
சாலையில் ஊற்றிய குருடாயில் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்
ADDED : ஜூலை 03, 2025 12:00 AM

பாகூர் : கன்னியக்கோவிலில் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஊற்றிய குருடாயிலை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றினர்.
கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று அதிகாலை டேங்கர் லாரி ஒன்று சென்றது. கன்னியக்கோவில் ஸ்ரீநிவாசா கார்டன் சந்திப்பு பகுதியில், சென்ற போது, லாரியின் வால்வு கழன்று, உள்ளே இருந்து குருடாயில் சாலையில் கொட்டியது. சாலை வழுவழுப்பதானதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அவ்வழியாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.
தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு செல்வம் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, சாலையில் கொட்டியிருந்த குருடாயிலை அகற்றினர். பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.