/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு இன்று துவங்குகிறது
/
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு இன்று துவங்குகிறது
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு இன்று துவங்குகிறது
மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு இன்று துவங்குகிறது
ADDED : டிச 08, 2025 05:00 AM
புதுச்சேரி: சட்டபை தேர்தலுக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், வி.வி., பாட் முதல் நிலை சரிபார்ப்பு இன்று 8ம் தேதி துவங்குகிறது.
புதுச்சேரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.,பாட் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரின் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சோதனை, சரிபார்ப்பு செய்யப்படுகின்றன. முதல்நிலை சரிபார்ப்பில், தேர்வு பெற்ற மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும், வி.வி.,பாட்க்கள் மட்டுமே தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த முதல் நிலை சரிபார்ப்பு பற்றிய விரிவான செயல்முறை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றிய கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய தேர்தல் ஆணையத்தின் www.eci.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.,பாட்க்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால் இன்று 8ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் நடக்க உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, இந்த முதல் நிலை சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இந்த முதல் நிலை சரிபார்ப்பு செயல்முறை தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட தலைமையகத்தில் தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், குறிப்பிட்ட இக்காலத்தில் முதல் நிலை சரிபார்ப்பு செயல்முறையை காண தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க கடிதம் மூலம் கோரப்பட்டனர். அந்த கோரிக்கை கடிதங்களை கட்சி மாநில தலைமையகம் ஏற்றுக்கொண்டன.

