/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் சட்டக் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

ADDED : அக் 14, 2025 03:44 AM

புதுச்சேரி :மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் சட்டக்கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், வழக்கறிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கம் , மக்களிடம் வழக்கறிஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டம் படித்தவர்கள் நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றத்துறை போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
சட்ட மாணவர்கள் கிளைன்ட், கேஸ், கோர்ட் ஆகிய மூன்றினை மறக்க கூடாது எனப் பேசினார்.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.விழாவில், சட்ட கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சட்டக் கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினார்.