/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா
/
செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா
செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா
செவிலியர் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா
ADDED : டிச 10, 2025 05:11 AM

புதுச்சேரி: கோரிமேடு அன்னை தெரேசா முதுகலைப் பட்டமேற்படிப்பு மற்றும் மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 10ம் ஆண்டு செவிலியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு விளக்கேற்றும் விழா நடந்தது.
விழாவை, சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள், கல்லுாரி புலமுதல்வர் அய்யப்பன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.இந்திராகாந்தி அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.
கஸ்துாரிபாய் காந்தி செவிலிய பயிற்சி கல்லுாரியின் முதல்வர் புனிதா ஜோசபின், மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லுாரி முதல்வர் திருமுருகன் வாழ்த்தி பேசினர்.
செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் சித்ரா வரவேற்றார். தொடர்ந்து, முதலாம் ஆண்டு செவிலிய பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் விளக்கேற்றி, உதவி விரிவுரையாளர் கலையரசி வழிகாட்டுதலின் படி, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' உறுதிமொழி ஏற்றனர்.
உதவி விரிவுரையாளர் லஷ்மி சைதன்யா நன்றி கூறினார். உதவி விரிவுரையாளர்கள் நிர்மலா சரவணன், அனிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

