ADDED : நவ 08, 2024 05:04 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலப்பட்டில் பைக் மோதி மீன்பிடி தொழிலாளி இறந்தார்.
பெரிய காலப்பட்டு, சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன், 35; மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்க சென்று விட்டு, இரவு 7:50 மணியளவில் இ.சி.ஆர்., வழியாக வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
மரக்கானம் ஆச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த பைக் சிவராமன் மீது மோதியது. படு காயமடைந்த சிவராமன் பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது மனைவி மஞ்சு கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
