தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு


UPDATED : நவ 11, 2026 08:26 PM

ADDED : நவ 11, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 08:26 PM ADDED : நவ 11, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: புதுச்சேரியில் 700 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம் நடத்த போவதாக மீனவ பஞ்சாயத்தார் எச்சரித்துள்ளனர்.

வீராம்பட்டினம் மக்கள் குழு சார்பில், கனக செட்டிகுளம், பனித்திட்டு, நரம்பை, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், காலாப்பட்டு, சோலை நகர், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட 18 மீனவர் கிராமங்களின் பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக் கூட்டம் வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் நேற்று நடந்தது.

பின், மீனவ பஞ்சாயத்தார்கள் கூறுகையில், ‘மத்திய அரசு உதவியுடன் 700 கோடி ரூபாய் மதிப்பில் மீனவர் கிராமமான நரம்பை மற்றும் பனித்திட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

18 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கடலில் மீன் வளமும் குறைந்துவிடும். மீனவர்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டத்தை அரசு தொடங்கினால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

கடற்கரை மேலாண்மை திட்டத்தையும் மத்திய அரசு தொடங்க உள்ளது. இதற்காக காரைக்காலில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள மீனவர்களின் கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us