தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நியமன எம்.எல்.ஏ., கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நியமன எம்.எல்.ஏ., கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நியமன எம்.எல்.ஏ., கேட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 01, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் மீனவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ., வழங்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நிறுவனர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மலையாளத்தான், மாநில அமைப்பாளர் தணிகாசலம், முதன்மை செயலாளர் சக்திவேல், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநிலத்தின் ஆண்டு வருவாயில் பெரும்பங்கு அளிக்கும் மீனவச் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்க வலியறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us