/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி
/
இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி
இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி
இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி மீனவர்கள் சட்டசபை நோக்கி பேரணி
ADDED : மார் 02, 2024 06:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மீனவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக உயர்த்த கோரி சட்டசபை நோக்கி பேரணியாக வந்து முதல்வரிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி மீனவர்களுக்கான இ.பி.சி., இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த கோரி மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினத்தன்று கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரை பைக் பேரணி நடத்தினர்.
இரண்டாம் கட்டமாக கடந்த 7ம் தேதி சிங்கார வேலர் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடத்தினர். இருப்பினும் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை.
இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக நேற்று மீனவர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை இரண்டு சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி சட்டசபை நோக்கி பேரணியாக மாதாகோயில் அருகே வந்தடைந்தது.
அங்கு தடுப்பு கட்டை அமைத்து பேரணியை போலீசார் தடுத்தனர்.
இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இறுதியில் முக்கிய நிர்வாகிகள் சட்டசபை சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

