/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' மீன்வளத்துறை எச்சரிக்கை
/
'மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' மீன்வளத்துறை எச்சரிக்கை
'மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' மீன்வளத்துறை எச்சரிக்கை
'மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்' மீன்வளத்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 08, 2024 04:55 AM
புதுச்சேரி; புதுச்சேரியில் இன்று காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மீன்வளத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இன்று (8ம் தேதி) காற்றுடன் கனமழை பெய்யும். கடல் காற்று 55 கி.மீ., வேகத்தில் வீசும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
மேலும், மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.