/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மீன்பிடி தொழில் செய்வோர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2024 03:18 AM

புதுச்சேரி : சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறையை கண்டித்து ஆற்றில் மீன்பிடி தொழில் செய்வோர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரியில் உள்ள ஆறுகளில் படகு சவாரி செய்ய சுற்றுலாத்துறை அனுமதி வழங்கி வருகிறது. ஆற்றில் படகு குழாம் அமைப்பதால், ஆறுகளில் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆற்றில் சுற்றுலா படகுகள் இயக்குவதை தடுக்க வேண்டும், முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும், அரியாங்குப்பம் ஆற்றில் சுற்றுலா படகு இயக்குவதிற்கு தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி சுதேசி மில் அருகில் ஆற்றில் மீன்பிடி தொழில் புரியும் உள்நாட்டு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ராமதாஸ், தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ பங்கேற்றுவாழ்த்தி பேசினர்.
இதில், உள்நாட்டு மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.