/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
/
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
ADDED : அக் 05, 2025 03:08 AM
நெட்டப்பாக்கம் : மடுகரை, சாட்டைகோல் பாதையில் ஒரு கும்பல் காசு வைத்து சூதாடுவதாக மடுகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அந்தகும்பல் தப்பியோட முயன்றது. அவர்களில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். நெட்டப்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த முருகன், 44; மடுகரை வி.எஸ்.நகர் வடிவேல், 46; குச்சிப்பாளையம் யோகபிரியா நகர் பழனிசாமி, 50; மடுகரை, இந்திரா நகர் அய்யப்பன், 41; மடுகரை - பண்ருட்டி சாலையைச் சேர்ந்த ஜெயக்குமார், 41, ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், இரண்டு மொபைல் போன்கள், 3,900 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய மடுகரையைச் சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.