/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
/
பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 04, 2025 04:15 AM

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில், பங்குனி உத்திர விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 43ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்து, காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 9:00 மணிக்கு தீர்த்த குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்தும்,செடல் போட்டும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துவர்.12ம் தேதி இரவு 8:00 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

