ADDED : மார் 17, 2024 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் மத்திய ஆயுதப்படையினருடன் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீசார் மற்றும் மத்திய தொழில் ஆயுதப்படை போலீசார் 90 பேர் நேற்று மாலை புஸ்சி வீதி, காந்தி வீதி, நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
எஸ்.பி. லட்சுமி சஜன்யா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெய்சங்கர், சப்இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்டோர் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

