/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமானம் சேவை... துவங்குகிறது; டிச.20ம் தேதி முதல் வாரம் முழுவதும் பறக்கலாம்
/
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமானம் சேவை... துவங்குகிறது; டிச.20ம் தேதி முதல் வாரம் முழுவதும் பறக்கலாம்
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமானம் சேவை... துவங்குகிறது; டிச.20ம் தேதி முதல் வாரம் முழுவதும் பறக்கலாம்
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமானம் சேவை... துவங்குகிறது; டிச.20ம் தேதி முதல் வாரம் முழுவதும் பறக்கலாம்
ADDED : நவ 09, 2024 06:24 AM
புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து டிசம்பர் 20 ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை துவங்குவதாக அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் இந்த விமானங்களை இயக்குகின்றது.
புதுச்சேரி விமானம் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. போதுமான லாபம் இல்லாத சூழ்நிலையில், விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் விமானங்களை இயக்க முன்வரவில்லை.
அதை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ைஹதராபாத்திற்கு மீண்டும் விமானங்களை இயக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் டிசம்பர் 20ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்துது பெங்களூரு, ைஹதராபாத்திற்கு மீண்டும் விமான சேவைகள் வாரம் முழுவதும் துவங்கப்பட உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - பெங்களூரு:
தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம், புதுச்சேரி விமான நிலையத்திற்கு மதியம் 12.25 மணிக்கு வந்தடையும். பின் மாலை 5.10 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
புதுச்சேரி - ைஹதராபாத்:
தினமும் மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், மதியம் 2.30 மணிக்கு ைஹதராபாத்தினை சென்றையும். பின் ைஹதராபாத்தில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படுறம் விமானம் மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தினை வந்தடையும்.
கட்டணம் எவ்வளவு:
விமான சேவைக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது, விமான கட்டணம், புக்கிங் உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவியில் அறிவிக்கப்படும் என விமான நிலையம் அறிவித்துள்ளது. இந்த சிறிய ரக விமானத்தில் 72 பேர் வரை அமர்ந்து செல்லலாம்.
மாநில பொருளாதாரத்தை உயர்த்தும்:
புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறும்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து விமான சேவைக்கான அட்டவணை பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும், வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இது பல்வேறு நகரங்களில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் பயணிகளுக்கு அதிக வசதி, மலிவு மற்றும் தடையற்ற பயண அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல இடங்களுக்கான விமான சேவையின் இணைப்பின் நோக்கமாக இது அமைகிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு இண்டிகோ தடையற்ற விமான சேவையை வழங்கி வருகின்றது.
எனவே, இது ஒட்டுமொத்த புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்கான கதவுகளைத் திறந்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்றார்.