/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை நாளை துவக்கம்
/
ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை நாளை துவக்கம்
ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை நாளை துவக்கம்
ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை நாளை துவக்கம்
ADDED : டிச 19, 2024 06:21 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு நாளை முதல் விமான சேவை துவங்குகிறது.
லாஸ்பேட்டை, விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க, இண்டிகோ நிறுவனம் முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக, பிரத்யேக அலுவலக அறைகள், தொழில் நுட்ப அறைகள், ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்பட உள்ளது. அதன்படி தினசரி காலை, 11:10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 12:25 மணிக்கு, புதுச்சேரியை வந்தடையும்.
மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் மதியம், 2:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். ஐதராபாத்தில் இருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.
புதுச்சேரியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6:35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில், 70 பேர் பயணம் செய்ய முடியும். இதையொட்டி, பயணிகளின் லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் புதிய டிராலிகள் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

