/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி பாதிப்பு கொம்மந்தான்மேடு கிராம மக்கள் அச்சம்
/
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி பாதிப்பு கொம்மந்தான்மேடு கிராம மக்கள் அச்சம்
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி பாதிப்பு கொம்மந்தான்மேடு கிராம மக்கள் அச்சம்
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணி பாதிப்பு கொம்மந்தான்மேடு கிராம மக்கள் அச்சம்
ADDED : அக் 19, 2025 04:12 AM

பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே, கடந்த 2011ம் ஆண்டு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அரைகுறையாக நடந்ததால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அணைக்கட்டு உடைவதும், தரை பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்வதும் வழக்கமாக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மீண்டும் தடுப்பணையின் கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, மண் அரிப்பு காரணமாக 100 மீட்டர் நீளத்திற்கு கரைகளை அடித்து சென்று, ஊருக்குள் வெள்ளம் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
அதனையொட்டி, புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ.10.83 கோடி மதிப்பீட்டில், கொம்மந்தான்மேடு பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் வெள்ள தடுப்பு சுவர் அமைத்து, சேதமான அணைக்கட்டை சீரமைக்கும் பணியை கடந்த மார்ச் 16ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
கட்டுமான பணிகள் துவங்கி, 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முதற்கட்டமாக கரையோரம் 300 மீட்டர் நீளத்திற்கும், 5 மீட்டர் உயரத்திற்கும் வெள்ளத் தடுப்பு சுவருக்கு அஸ்திவார பணிகள் நடந்து வந்தது. ஒப்பந்தப்படி இப்பணியை, வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்தாக வேண்டும்.
இந்நிலையில், அவ்வப்போது பெய்து வந்த மழையால், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால், மழைக் காலத்திற்கு முன்பாக கட்டுமான பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மற்றும் திருவண்ணாமலை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சாத்தனுார் அணை நிரம்பியதை தொடர்ந்து,அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால், கொம்மந்தான்மேடு படுகை அணை மற்றும் வெள்ளத் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மேலும், கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால், ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும்.
கடந்தாண்டு ஏற்பட்டது போல், மீண்டும் பெரிய அளவிலான வெள்ளப் பெருக்கு இந்த ஆண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கொம்மந்தான்மேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் தேவையான வெள்ளப் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.