/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளர் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
/
இருளர் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
ADDED : டிச 04, 2024 07:58 AM
அரியாங்குப்பம் : டி.என்., பாளையம், இருளர் பகுதியில் வெள்ளம் சூழந்ததால், அங்கு வசித்த 40 பேர், அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சாத்தனுார் அணையில் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதையடுத்து, கடலுார் தென்பெண்ணை ஆற்றில், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெண்ணையாற்றில் இருந்து வெள்ளம், டி.என்., பாளையம் வழியாக செல்லும் மலட்டாற்றில் புகுந்தது. டி.என்.,பாளையம் அருகே இருந்த 50 இருளர் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது.
தகவலறிந்த, தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு குடியிருந்த 40 பேரை, மீட்பு, அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர். கடலுார் சாலை , ரெட்டிச்சாவடி அருகே குறுக்கே செல்லும் மலட்டாறு தண்ணீர், பெரியக்காட்டுப்பாளையம் பகுதியையும் சூழ்ந்தது.