/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
/
சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : அக் 17, 2025 11:25 PM
புதுச்சேரி: வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிரா மங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் அடுத்த வீடூர் அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 2:00 மணி அளவில் 28 அடியை எட்டியது.
தொடர்ந்து ௪௧௭ கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கோனேரிக்குப்பம், ஆரியப்பாளையம், மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077, 1070, 112 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மேலும், 94889 81070 எண்ணிற்கு, வாட்ஸ் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.