/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
/
ஏனாமிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஜூலை 14, 2025 03:48 AM
புதுச்சேரி : தொடர் கனமழையால் ஏனாமிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆந்திரா மாநிலத்தின் அருகேயுள்ள ஏனாம் பிராந்திய தவனேஸ்வரம் அணை, பத்ராச்சலம் அணை ஆகியவை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், கோதாவரி ஆற்றின் வழியாக கடலுக்கு செல்கிறது. இதனால், ஏனாம் கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலயோகி பாலத்தின் கீழ் வெள்ளம் கரைபுரண்ட ஓடுகிறது.
கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக ஏனாமில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.