/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
/
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
தென்பெண்ணை, சங்கராபரணியில் வெள்ளப்பெருக்கு: கவர்னர் ஆய்வு
ADDED : டிச 03, 2024 06:27 AM

புதுச்சேரி: ஆரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டார்.
பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டு சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆரியபாளையம் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சாத்தனுார் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும், பாகூர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராம குடியிருப்புகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.