ADDED : ஜூன் 26, 2026 03:31 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: இயக்குனர் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி இன்று மாலை 6.00 மணிக்கு குயவர்பாளையத்தில் உள்ள கீர்த்தி மகாலில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி,திரைப்பட பெப்சி அமைப்பின் பொது செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி அவனி கலை பண்பாட்டுச் சங்கம் மற்றும் புதுச்சேரி நடிகர்கள்-பன்முக கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில் பாரதிராஜாவுக்கு சிறப்பு மலர் வணக்கம் செலுத்தப்பட உள்ளது.
ஏற்பாடுகளை புதுச்சேரி அவனி கலை பண்பாட்டுச் சங்க தலைவர் கலியபெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
