தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலர் கண்காட்சி நிறைவு விழா: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

 மலர் கண்காட்சி நிறைவு விழா: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

 மலர் கண்காட்சி நிறைவு விழா: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : பிப் 02, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் 36-வது மலர், காய், கனி கண்காட்சி கடந்த 30 ம் தேதி தாவரவியல் பூங்காவில் துவங்கியது. நேற்று கண்காட்சி நிறைவு விழா நடந்தது.

விழாவில் மலர் கண்காட்சியினை முன்னிட்டுதொட்டி வளர்ப்பு, கொய்யா மலர், காய்கறிகள், கனிகள், மூலிகை தோட்டம், அலங்கார தோட்டம், வீட்டுத்தோட்டம், மாடி தோட்டம், தானிய ரகங்கள் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெயசங்கர் வரவேற்றார்.

வேளாண்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் சவுத்ரி முகமது யாசின் முன்னிலை வகித்தார். விழாவுக்கு அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மலர் ராணி பட்டத்தினை கருவடிக்குப்பம் விமலா, மலர் ராஜா பட்டத்தை பூபாலன் நகரை சேர்ந்த கணேசன், காய்கனி ராணி பட்டத்தினை பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி, காய்கனி ராஜா பட்டத்தினை அதேபகுதியை சேர்ந்த தர்மபாலன் ஆகியோர் பெற்றனர். சிறந்த ரோஜா தோட்டத்திற்கான மனோரஞ்சன் கங்குலி சுழற்கோப்பை மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், தனிநபருக்கான ரோஜா தொட்டி வளர்ப்பு சுழற்கோப்பை பூபாலன் நகர் கணேசனுக்கும் வழங்கப்பட்டன.

அதிக பரிசுகள் பெறும் நிறுவனத்துக்கான சுழற்கோப்பையை புதுச்சேரி பல்கலைக்கழகம் பெற்றது.

2-வது பரிசை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, 3-வது பரிசை அரவிந்த் கண் மருத்துவமனை, பெற்றது.

4-வது பரிசை காஞ்சி மாமுனிவர் அரசு மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை பெற்றன.

மொத்தம் 261 நிறுவனங்கள், 251 தனிநபர் என 512 போட்டியாளர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற 232 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தோட்டக்கலை பிரிவின் இணை இயக்குனர் சண்முகவேலு நன்றி கூறினார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் 61 அரசு ஆரம்ப பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்காக ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 650 காசோலை பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.காரைக்கால் பண்டித ஜவகர்லால்நேரு வேளாண்மை கல்லூரி பேராசிரியர் திருமேனி உருவாக்கிய செர்ணாவாரி பட்டத்துக்கு ஏற்ற கே.கே.எல்.(ஆர்) 5 என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us