மலர் கண்காட்சி செடிகள் ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனை
மலர் கண்காட்சி செடிகள் ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனை
ADDED : பிப் 04, 2026 05:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மலர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர் செடிகள் நேற்று மானிய விலையில் ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையானது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் 3 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மற்றும் லாஸ்பேட்டை வேளாண் நர்சரியில் உற்பத்தி செய்த மொத்தம் 40,000 மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி முடிந்தபின் நேற்று முதல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர் செடிகளை 50 சதவீத மானிய விலையில் தாவரவியல் பூங்காவில் விற்பனை நடந்தது. மலர் செடிகளை வாங்குவதற்கு ஏராளமான பூங்காவில் குவிந்து விட்டனர். இதில், பெரும்பாலானோர் ரோஜா செடிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். நேற்று ஒரே நாளில் ரூ.50 துவங்கி ரூ.100 வரை 4,500 மலர்ச்செடிகள் ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையானது. இன்றைக்கும் மலர்ச்செடிகள் விற்பனை உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
