/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலர், காய், கனி கண்காட்சி: முதல்வர் துவக்கி வைப்பு
/
மலர், காய், கனி கண்காட்சி: முதல்வர் துவக்கி வைப்பு
மலர், காய், கனி கண்காட்சி: முதல்வர் துவக்கி வைப்பு
மலர், காய், கனி கண்காட்சி: முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 17, 2025 06:11 AM

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை சார்பில் மலர், காய், கனி, கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், காரைக்கால் கார்னிவல் - 2025 விழா நேற்று துவங்கியது. இதன் ஒரு அங்கமாக வேளாண் திருவிழா மற்றும் மலர், காய், கனி கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, பேசியதாவது;
புயலால் பாதிக்கப்பட்ட காரைக்காலில் விவசாயிகளுக்கு நிவாரணம் தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசு பல்வேறு துறைகளில் 3 ஆயிரம் பணியிடங்களை நிறப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிஅரசு மத்திய அரசிடம் பல்வேறு திட்டப்பணிக்கு ரூ.4,500 கோடி கோப்புகள் வைக்கப்பட்டது.
இதில் ரூ.2800கோடி மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. காரைக்காலில் சிறந்த மருந்துவக்கல்லுாரி, மருந்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
விழாவில், அமைச்சர் திருமுருகன் முன்னிலை வகித்தார். தானியம், மலர் காய் கனிகளை கொண்டு ரங்கோலி அலங்காரம், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், நிறுவனத் தோட்டம், மூலிகைச் செடிகள் மற்றும் பல்வேறு வகையான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இப்போட்டிகளில் அதிக பரிகள் பெறுவோருக்கு 'மலர் ராஜா', மற்றும் 'மலர் ராணி' விருதுகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன், சிவா, சந்திரபிரியங்கா,வேளாண்துறை இயக்குநர் வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.