தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை

 மாநில எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை

 மாநில எல்லை பகுதிகளில் பறக்கும் படை தீவிர சோதனை


ADDED : மார் 17, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது.

அதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடபட்டு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.இதையொட்டி, மாநில எல்லைகளில் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி கோரிமேடு எல்லையில் கதிரேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினருடன் இணைந்து வெளிமாநில வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வரபடுகிறதா என தீவிர சோதனை மேற்கொண்டனர்.மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகளுடன் வந்த கார்களை தடுத்து நிறுத்தி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us