தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரிக்கு தங்க நகைகள் ஏற்றி வந்த வேனை பறக்கும் படை சோதனை செய்ததால் பரபரப்பு

 புதுச்சேரிக்கு தங்க நகைகள் ஏற்றி வந்த வேனை பறக்கும் படை சோதனை செய்ததால் பரபரப்பு

 புதுச்சேரிக்கு தங்க நகைகள் ஏற்றி வந்த வேனை பறக்கும் படை சோதனை செய்ததால் பரபரப்பு


ADDED : மார் 25, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 04:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உரிய ஆவணமின்றி தங்க நகைகள் ஏற்றி சென்ற மினி வேனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

சென்னை ஜி.ஆர்.டி., நகை கடையில் இருந்து, புது டிசைன் நகைகளை எடுத்துக் கொண்டு புதுச்சேரி ஜி.ஆர்.டி., நகை கடைக்கு மினி வேனில் (டி.என்.09.டி.பி.0231) நேற்று மதியம் 2:30 மணிக்கு வந்தது. அப்போது கோரிமேடு எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்தபோது நகைக்கான உரிய ஆவணங்கள் இருந்ததால், வேனை அனுப்பி உள்ளனர்.

பின் அந்த வேன் புதுச்சேரி ஜி.ஆர்.டி., நகைக்கடையில் புது நகைகள் டெலிவரி செய்தனர். பின் அந்த கடையில் விற்கமால் இருந்த பழைய டிசைன் நகைகளான ஜெயின், மோதிரம் உள்ளிட்ட நகைகளை திரும்ப சென்னை ஜி.ஆர்.டி., தலைமை நகைக்கடையில் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.

அந்த மினி வேன் சாரம் அவ்வை திடல் வழியாக சென்றபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நகைக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் வேனை தட்டாஞ்சாவடி தேர்தல் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நகைகளை சோதனை செய்தனர். இதற்கிடையில் நகைக்கான உரிய ஆவணங்களை நகை கடை சார்பில் கொடுக்கப்பட்டு, அதனை சரிசெய்யும் பணியில் தேர்தல் துறை அதிகாரிகள் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us