/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெயின்போ நகரில் உணவு பொருட்கள் வழங்கல்
/
ரெயின்போ நகரில் உணவு பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 03, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெயின்போ நகரில் மழையால் பாதித்த மக்களுக்கு, காங்., சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உணவு பொருட்கள் வழங்கினார்.
பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்., மாநில சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் நேற்று உணவுப் பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சீனியர் காங்., தலைவர் மணி, காங்., அயலக பிரிவு தலைவர் பரந்தாமன், காங்., பிரமுகர்கள் வினோத், பெருமாள், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.