/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்
/
ராஜசந்துரு அறக்கட்டளை கோவிலில் அன்னதானம்
ADDED : ஆக 08, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை செங்கழுநீர் அம்மன் கோவிலில் நடந்த ஆடிமாத பிரம்மோற்சவ விழாவில், ராஜசந்துரு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முத்தியால்பேட்டை, சோலை நகரில் செங்கழுநீர் அம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மாத பிரம்மோற்சவ விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், வீதியுலா நடந்தது.
நிகழ்ச்சியில், ராஜ சந்துரு அறக்கட்டளை சார்பில், ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனர் ராஜசந்துரு வழங்கினார்.