ADDED : ஜூலை 19, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நைனார்மண்டபம், நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அன்னதானம் வழங்கினார்.
முதலியார்பேட்டை தொகுதி, நைனார்மண்டபத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 42ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஏற்பாட்டில் நடந்த அன்னதானத்தை முதல்வர் ரங்கசாமி பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.