/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு
/
புதுச்சேரியில் கனமழையால் பாதித்தவர்களுக்கு உணவு
ADDED : டிச 01, 2024 04:30 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் பேருக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.
பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதல் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை நேற்று பாதிக்கப்பட்டது.
அதையொட்டி புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி, மற்றும் பாகூர், வில்லியனுார் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் பேருக்கு லாஸ்பேட்டை அட்சய பாத்திரம் உணவு கூடத்தில் சாம்பார் சாதம் தயார் செய்து நேற்று மதியம் வழங்கப்பட்டது.
முன்னதாக உணவு தயார் செய்யும் கூடத்திற்கு வந்த கலெக்டர் குலோத்துங்கன் உணவு தரம் குறித்து ருசி பார்த்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் தயாளன், அட்சய பாத்திரம் அரசு தொடர்பு அலுவலர் ஜூலியன் ஆகியோர் உடனிருந்தனர்.

