ADDED : நவ 21, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால்பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த இறுதியாண்டு மாணவிகள், பேராசிரியர் பார்த்தசாமி வழிகாட்டுதலின்படி திருக்கனுார் பகுதிகளில் 'ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி' மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கூனிச்சம்பட்டு பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, உணவு பாதுகாப்பு, சிக்கனம், கலப்படம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வேளாண்மையின் அவசியம் குறித்து வேளாண் கல்லுாரி மாணவிகள் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.

