/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்புரவு ஆய்வாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
/
துப்புரவு ஆய்வாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
ADDED : ஜன 23, 2025 05:14 AM
புதுச்சேரி: துப்புரவு ஆய்வாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், மேஸ்திரிகளுக்கு, ஓட்டல்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், கடைகளை ஆய்வு மேற்கொள்ள, உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தரநிலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில், உணவு பாதுகாப்பு அதிகாரி பாலகிருஷ்ணன், ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பங்கள், சுகாதார தரம் பற்றி ஆய்வு செய்தல், அதற்குண்டான நடைமுறைகளை ஆவணப்படுத்துதல், இது தொடர்பான அறிக்கைகளை உணவு பாதுகாப்பு துறைக்கு சமர்ப்பித்தல் பற்றி விளக்கினார்.
பயிற்சியில், உழவர்கரை நகராட்சி ஆணையர், சுகாதார துறை அதிகாரிகள், சுகாதார பிரிவு இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.