UPDATED : அக் 03, 2026 01:49 AM
ADDED : அக் 03, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கோரிமேடு கால்பந்து கழகம் சார்பில், 2ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி போலீஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.
போட்டிகள் காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 11:00 மணி வரை நடக்கிறது. இத்தொடரில் 7 வயதிற்குட்பட்டோர், 10 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர் ஆகிய வயது வரம்பு பிரிவுகள், அனைவருக்கான ஓபன் பிரிவு மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சீனியர் பிரிவு என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டியில், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்நத 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
