தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தட்டாஞ்சாவடி தொகுதியில் கால்பந்து மைதானம்

தட்டாஞ்சாவடி தொகுதியில் கால்பந்து மைதானம்

தட்டாஞ்சாவடி தொகுதியில் கால்பந்து மைதானம்


UPDATED : அக் 31, 2026 12:11 AM

ADDED : அக் 31, 2026 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:11 AM ADDED : அக் 31, 2026 12:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் கால்பந்து மைதானம் அமைக்க வேண்டும் என, விளையாட்டு வீரர்கள் தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்திடம் கோரிக்கை வைத்தனர்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என புதுச்சேரி யுனைடெட் கால்பந்து அகாடமி வீரர்கள், தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

சந்திப்பின்போது, தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசு சார்பில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைத்து தருவதன் மூலம், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளம் வீரர்கள் பயனடைவார்கள். அவர்களுடைய விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றனர்.

வீரர்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தையும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us