/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சிக்கு... ரூ. 4,750 கோடியில் திட்டம்; அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
/
ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சிக்கு... ரூ. 4,750 கோடியில் திட்டம்; அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சிக்கு... ரூ. 4,750 கோடியில் திட்டம்; அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சிக்கு... ரூ. 4,750 கோடியில் திட்டம்; அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
ADDED : டிச 21, 2024 08:38 AM

புதுச்சேரி: புதுச்சேரியின் ஒருங்கிணைந்த நகர்புற வாழ்வாதார மேம்பாடு திட்டங்கள் 4,750 கோடி ரூபாய் செலவில் ஆசிய வங்கி மூலம் இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என, அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தில் புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்கு பேசியதாவது:
சிறிய நிலப்பரப்பினை கொண்ட புதுச்சேரியில் வருவாய் திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. வரிகளையும் உயர்த்த முடியாது. எனவே சட்டசபை கொண்ட புதுச்சேரியை மாநிலங்களுக்கு இணையாக கருதி, மத்திய அரசுக்கும், புதுச்சேரிக்கும் இடையே வருவாய் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிதி பகிர்வு விவகாரத்தில் புதுச்சேரியை மாநிலத்திற்கு இணையாக நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. ஆனால் அரசியலைப்பு 280 பிரிவு-3 மாநிலங்களை மட்டுமே குறிக்கின்றது என, நிராகரிக்கப்படுகிறது.
ஆனால் நிதி விவகாரங்களில் மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுக்கும்போதெல்லாம் பல விஷயங்களில் புதுச்சேரியை மாநிலங்களுக்கு இணையாக கருதி பொதுப்படையாக முடிவு எடுக்கப்படுகிறது.
எனவே, மாநிலங்கள் என்ற சொல்லை பொருத்தவரை அரசியலமைப்பு 280 பிரிவு-3 திருத்தி மத்திய நிதி ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் சேர்க்கலாம். அல்லது 16வது மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க சிறப்பு குறிப்பு செய்யலாம். புதுச்சேரி நிர்வாகம் மத்திய அரசின் நிதியை சார்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நிதியை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
புதுச்சேரியில் மூலதன முதலிட்டிற்கான மாநிலங்களுக்கு நிதி உதவியின் கீழ் சேர்த்து கொள்ளுவதற்கான கோரிக்கை மத்திய அரசு நிராகரித்தது. இதை தொடர்ந்து, புதுச்சேரிக்கு வழங்கும் மத்திய நிதி உதவியில் கூடுதலாக மூலதன தலைப்பின் கீழ் வழங்குவதற்கான கோரிக்கையை புதுச்சேரி அரசு சமர்ப்பித்துள்ளது.
புதுச்சேரியில் 1,245.37 கோடியில் மூலதன உட்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று சட்டசபை கட்ட 600.37 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை மத்திய உள்துறை அமைச்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி விமான நிலையத்திற்காக 217 ஏக்கர் நிலம் கையகப்படுத்த 500 கோடிக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. குடிநீர், கழிவு நீர், சுகாதாரம், சாலை இணைப்பு என, புதுச்சேரியின் ஒருங்கிணைந்த நகர்புற வாழ்வாதார மேம்பாடு திட்டங்கள் 4,750 கோடி ரூபாய் செலவில் ஆசிய வங்கி மூலம் இரண்டு கட்டமாக வெளிப்பற நிதியுதவி திட்டத்தின் கீழ் செயல்படுத்த புதுச்சேரி அரசு உத்தேசித்துள்ளது.
இத்திட்டம் 90க்கு 10 என்ற கடன் சுமையின் கீழ் மேற்கொள்ளப்படும், எனவே, இத்திட்டத்தின் கீழ் 2025-26 ம் நிதியாண்டில் 500 கோடி பெற ஏற்பாடு செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு உலக வங்கிகளிடமிருந்து கடன்களை பெற்று, கடலோர மீள்தன்மை, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு செலவினம் 1,433 கோடியாகும். வெளிப்புற நிதி பெறும் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் 200 கோடி ரூபாய் ஏற்பாடு செய்ய வேண்டும். 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டில் கோரப்பட்டுள்ள கூடுதல் நிதியான 2,887.25 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

