நாடு வளர்ச்சி அடைய உள் கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் :முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு
நாடு வளர்ச்சி அடைய உள் கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் :முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு
ADDED : மார் 29, 2026 07:33 PM

புதுச்சேரி: நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உள் கட்டமைப்பு வசதி நல்ல முறையில் இருக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியில் எந்தவொரு உள் கட்டமைப்பு வசதிகளும் செய்யவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி, மாநில வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப் படுத்தியுள்ளார்.
புதுச்சேரி கொக்கு பார்க்கில் இருந்து இந்திரா சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம், புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை சாலையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மரக்காணம் முதல் புதுச்சேரி வரை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது.
காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு சாலை மேம்படுத்தி நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வழி சாலையை திட்டத்ததை காங்., அரசு முடக்கியது. அதன் பிறகு பிரதமர் மோடி நான்கு வழி சாலை திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்தி வருகிறார்.
துறை முகம் வளர்ச்சி திட்டங்கள், சரக்கு கப்பல்கள் வருவதற்கு கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட உள்ளது. கரசூரில் 750 ஏக்கரில் தொழில் பேட்டை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சோனியாவின் குடும்பத்தை மகிழ்விக்கது தான் அவரது நோக்கமாக இருந்தது. புதுச்சேரி வளர்ச்சிக்கு அவர் ஏதுவும் செய்யவில்லை. நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உள் கட்டமைப்பு வசதி நல்ல முறையில் இருக்க வேண்டும் என்றார்.
