UPDATED : நவ 28, 2026 02:00 AM
ADDED : நவ 28, 2026 12:44 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கார்ஷெட்டில் சிக்கிய வெளிநாட்டு பூனையினை தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
லாஸ்பேட்டை, அவ்வை நகரை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டு பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பூனை நேற்று இரவு அருகில் உள்ள வீட்டின் கார் ஷெட் பகுதியின் இடையில் சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் கத்தியபடி அங்கும் இங்குமாக ஓடி தவித்தது.
தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, வெளிநாட்டு பூனையை பத்திரமாக மீட்டனர். பின், உரியவரிடம் அதனை ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
