/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி வேளாண் அலுவலர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி வேளாண் அலுவலர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி வேளாண் அலுவலர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை மாஜி வேளாண் அலுவலர் கைது
ADDED : நவ 06, 2024 05:45 AM
பாகூர்: பாகூர் கரையாம்புத்தூர் அடுத்துள்ள பனையடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் 67; இவர் புதுச்சேரி அரசின் வேளாண் துறையில் உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது, ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வரும் இவர். பனையடிகுப்பத்தில் மீன் பண்ணை வைத்துள்ளார். அந்த மீன் பண்ணையில் தமிழக பகுதியை சேர்ந்த இருளர் தம்பதியினர் தங்களின் 2 மகள்கள், ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பண்ணையில் இருந்த 12 வயது சிறுமியை, ஓம் பிரகாஷ் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தாக பாகூர் போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஓம்பிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, பாகூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஓம் பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.