/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணு வீரர்கள் நலச்சங்கம் இணைப்பு
/
முன்னாள் ராணு வீரர்கள் நலச்சங்கம் இணைப்பு
ADDED : ஜூலை 03, 2025 12:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் ராணு வீரர்கள் நலச்சங்கம், அகில இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவுடன் நேற்று இணைந்தது.
புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச்சங்கம் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த சங்கத்தில் 570 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற அகில இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுடன், இந்த சங்கத்தை இணைப்பது குறித்து கடந்த ஓராண்டுகளாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், அகில இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவுடன், புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் நேற்று இணைந்தது.
இணைப்பிற்கான சான்றிதழை ஒருங்கிணைப்பு குழுவின் அகில இந்திய தலைவர் ஜெகன்ரெட்டி, புதுச்சேரி சங்கத்தின் தலைவர் மோகனிடம் வழங்கினார். இதில், புதுச்சேரி சங்கத்தின் சட்ட ஆலோசகர் அசோக் பாபு, ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர்கள், புதுச்சேரி சங்கத்தின் நிர்வாகிகள் சுரேஷ்குமார், கந்தசாமி, செல்வமணி, டொமினிக், சூடாமணி, ராமமூர்த்தி, லட்சுமிநாராயணன், சிவசுப்ரமணியன், குமரகுரு, சிவராமன், வீரமணி, ரமேஷ் உட்பட 150 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.