ADDED : ஏப் 17, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரசு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர், வீட்டில் கீழே விழுந்து இறந்தார்.
தவளக்குப்பம் நாணமேடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி, 86; ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். உடல் நிலை பிரச்னையால், மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் பாத் ரூமிற்கு சென்றவர், வழுக்கி கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
