/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
/
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார் மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜன 10, 2024 01:58 AM

காரைக்கால் : முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளதாக மாஜி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அளவுக்கு அதிகமான கூட்டம் கூட்டியதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக காரைக்கால் வந்த மாஜி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது;
மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தமிழக மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புதுச்சேரியில் மழை பாதிப்புகளை அரசு கணக்கெடுப்பு நடத்தவில்லை. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ அரிசி, ரூ. 5,000, விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்.
புதுச்சேரி காரைக்காலில் பிரிப்பெய்ட் மீட்டர் பொருத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மின்துறையை தனியாரிடம் வழங்க என்.ஆர்.காங்., அரசு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்து காங்., போராடி வருகிறது.
முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பெரும் ஊழலில் சிக்கியுள்ளனர். மதுபான தொழிற்சாலைக்கு ரூ. 15 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பா.ஜ., எம்.எல்.ஏ., புகார் தெரிவித்துள்ளார்.
ரெஸ்ட்ரோ பார்களுக்கு 20 முதல் 40 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து அனுமதி பெறப்படுகிறது.
காங்., ஆட்சியில் 400 மதுபான கடை இருந்தது. தற்போது 950 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முட்டையில் ஊழல், போலீசில் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெறுகின்றனர். அமைச்சர்கள் பினாமி மற்றும் மனைவி பெயர்களில் சொத்து வாங்கி உள்ளனர்.
அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. கால்நடைக்கு வழங்கும் தீவனத்தில் ஊழல், ரேஷன் கார்டு மாற்ற லஞ்சம் என அனைத்து துறைகளிலும் ஊழல் ஆட்சி நடக்கிறது.
ரவுடிகள் ஆதிக்கம் அதிகரித்து, கொலை நகராக புதுச்சேரி மாறி வருகிறது. இவ்வாறு அவர், கூறினார்.
அப்போது, முன்னாள் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

